Featured

பஞ்சமுட்டி கஞ்சி

 


இப்போது  உள்ள மக்கள்பண்டைய உணவு பழக்கத்தைமறந்துவிட்டு நவீன உணவுபழக்கத்திற்கு மிகுந்த ஆர்வம்காட்டிவருகிறார்கள்.குழந்தைகளுக்குகொடுக்கும் உணவுகளில் தற்போது மரபணு மாற்றப்பட்ட உணவுகளான பீடியாசர் ,செர்லாக் போன்ற உணவுகளேதற்போது தாய்மார்கள்  கொடுத்து வருகிறார்கள்இதனால்வரும் பின் விளைவுகள் எண்ணற்றதுசிலர் குழந்தைகளுக்குஊட்ட சத்து குறைவான உணவுகளை கொடுப்பதால்ஊட்டச்சத்து குறைவினால் பல நோய்கள் ஏற்படுகிறது

 

நமது உடலில் தோன்றும் எந்தவித பிரச்சனைகளுக்கும் நாம்உணவின் மூலமே தீர்வு காணலாம் என்பது சித்தர்களின்ாக்கு ”உணவே மருந்துமருந்தே உணவுகுழந்தைகளின்நலத்தை காப்பதற்காக சித்தரிகள் கொடுத்த சிறந்த உணவுமுறை தான் "பஞ்ச முட்டி  கஞ்சி"இது ஒரு சிறந்தஊட்டச்சத்து நிறைந்த அர்புதமான உணவாகும்.

பஞ்ச மூட்டி கஞ்சி - பஞ்ச என்றால் ஐந்து என்றும் முட்டிஎன்றால் முடிச்சு என்றும் பொருள்படும்இதில் 5 வகையானபுரதச்சத்து நிறைந்த தானியங்களை முடிச்சாக கட்டி செய்யும்கஞ்சி என்பதால் பஞ்சமுட்டி கஞ்சி என்று பெயர் பெற்றது.

 

பஞ்சமுட்டி கஞ்சி செய்ய தேவையான பொருட்கள்:




● பச்சரிசி
● உளுந்து
● துவரம்பருப்பு
● கடலைப்பருப்பு
● பச்சைப்பயிறு

 

செய்முறை:
அனைத்து பொருட்களையும் சம அளவுஎடுத்துக் கொள்ளவும்அதனை மிதமானதீயில் நன்கு வறுத்து பொடித்து வைத்துக்கொள்ளவும்பின் பொடித்து வைத்துள்ளபொடியை ஒரு சுத்தமான துணியில்தேவையான அளவு வைத்து ஒரு முடிச்சு போட்டுக் கொள்ளவும்பின்னர் ஒரு பாத்திரத்தில் 250 மி.லிதண்ணீர் சேர்த்து அதில்முடிச்சை போடவும்நன்கு கொதித் அதிலிருந்து சாம்பல் நிறநீர்பிரியும் அந்த சமயத்தில் அடுப்பை அனைத்து விட்டுகஞ்சியை எடுத்துக் கொள்ளவும்.

 

குறிப்பு:

 

● மாதங்களுக்கும் மேலான குழந்தைகளுக்கு மட்டும் தான்கொடுக்க வேண்டும்
● பெரியவர்கள் முடிச்சு இல்லாமல் வெறும் கஞ்சியாகவேகாய்ச்சி கொடுக்கலாம.

 

நன்மைகள்:

● ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பராமரிப்பதில் இதுமுக்கிய பங்கு வகிக்கிறது.
● இது நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது மற்றும்நோயைத் தடுக்க உதவுகிறது.
● இது நோய் அதிரிப்பு சக்தியை அதிப்ப்படுத்தும்மற்றும்அதிக நார்ச்சத்து மற்றும் நுண்ணூட்டச்சத்துக்களைக்கொண்ட புரதச்சத்து நிறைந்த கஞ்சியாகும்.
● குழந்தையின் எடையை மேம்படுத்துகிறது .(குறைவானஊட்டச்சத்துள்ள குழந்தைகளுக்கு மிகவும்பரிந்துரைக்கப்படுகிறது).

 

குறிப்பு:

மிக முக்கியமாகதாய்ப்பால் என்பது ஒரு குழந்தைக்கு உணவுஅல்லது பானமாகும்இது 6 மாதங்களுக்கு பிரத்தியேகமாககொடுக்கப்பட வேண்டும்.


Siddha A Way of Life 


Dr.  R.Rushmi Kruthiga, B.S.M.S.,Reg no : 6930


 

Comments

Popular Posts