Search This Blog
Welcome to Chendursiddha blog. Siddha is a traditional system of medicine mainly followed in southern parts of India. More than a medicine "Siddha a way of life" .
Featured
- Get link
- X
- Other Apps
மெட்ராஸ் ஐ
அறிகுறிகள்:
● கண் சிவத்தல்
● கண்ணில் ஏதோ இருப்பது போன்ற ஒரு உணர்வு
● எரிச்சல், அரிப்பு, கண்களில் நீர் வடிதல்
● கண்ணில் மஞ்சள் அல்லது பச்சை நிறத்தில் நீர் கசிவு வருதல்.
● இரவு முழுவதும் அதிகமாக நீர் கசிந்து காலையில் கண்களைத் திறப்பதில் சிரமம்
● கண் கூசல்
● கண் இமை வீக்கம் (தீவிரமான நிலைகளில் )
● மங்கலான பார்வை.
மெட்ராஸ் ஐ தடுப்பதற்கான வழிமுறைகள்:
● வேறு எந்த பொருட்களையும்தொட்ட பின்பு கைகளை கழுவாமல் கண்களைத் தொடக்கூடாது
● கைகளை அடிக்கடி கழுவ வேண்டும் .
● தலையணை உறையை அடிக்கடி மாற்ற வேண்டும்.
● பாதிக்கப்பட்ட நபரால் பயன்படுத்தப்படும் ஒப்பனை பொருட்கள், துணிகள், துண்டுகள் போன்றவற்றை பகிர்ந்து கொள்ளக்கூடாது.
● கண் மை மற்றும் காண்டாக்ட் லென்ஸ்களை பிறரிடம் பகிர்ந்து கொள்வதைத் தவிர்க்கவும்.
● உடைகள், படுக்கை இவற்றை சுத்தமாக துவைத்து வெயிலில் காய வைக்க வேண்டும்.
மெட்ராஸ் ஐ வந்த பின்பு பின்பற்றக்கூடிய வழிமுறைகள்:
● சுத்தமான துணியை சூடான தண்ணீரில் நனைத்து கண்களை துடைத்து விட வேண்டும்.
● நீங்கள் காண்டாக்ட் லென்ஸ் பயன் படுத்துபவராக இருந்தால் அதனை நிறுத்திவிட்டு கண்ணாடி பயன் படுத்த வேண்டும்
● நன்றாக உறங்க வேண்டும்.
● கண்களுக்கு ஓய்வு தேவை.
● நீண்ட நேரம் செல்போன், கம்ப்யூட்டர், உபயோகிப்பதை தவிர்க்கவும்.
சித்த மருத்துவ தீர்வு:
மெட்ராஸ் ஐ தானாகவே சரியாகக்கூடிய நோய். நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியே இதனை குணமாக்கிவிடும். மேலும் கண் எரிச்சல் கண் வலி இருந்தால் கீழே கூறிய சித்த மருத்துவ தீர்வுகளை பயன்படுத்திக்கொள்ளலாம்
● தூய்மையான நீரில் துணியை நனைத்து கண்களில் ஒற்றடம் இடலாம்.
● திரிபலா சூரணம் தேவையான அளவு எடுத்து அதை தண்ணிரில் கொதிக்க வைத்து வற்ற வைத்து ஒரு சிட்டிகை படிகாரம் சேர்த்து வடிகட்டி கண்களை கழுவுவதற்கு பயன் படுத்தவும்.
● மல்லிகைப் பூவை வெள்ளைத் துணியில் சுருட்டி கண்களை சுற்றி கட்டி விட வலி வீக்கம் குறையும்.
● நந்தியாவட்டை பூவை கசக்கி கண்களில் இரண்டு சொட்டு விடலாம். அல்லது மல்லிகைப் பூவை செய்வது போலவே இதையும் கண்களில் கட்டிவிடலாம்.
● தாய்ப்பாலை கண்களில் துளியாக விடலாம் விரைவில் குணம் கிடைக்கும்.
உணவு:
● நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கக்கூடிய இஞ்சி,ஏலக்காய், மஞ்சள், மிளகு போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
● இந்நோயில் சூட்டைத் தணிக்கக் கூடிய உணவுகளை உண்ண வேண்டும். சிக்கன் போன்ற உடல் சூட்டை அதிகப்படுத்தும் உணவுகளை தவிர்க்க வேண்டும்.
● குளிர்ச்சியை தரக்கூடிய உணவு வகைகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
● மெட்ராஸ் ஐ உள்ள நேரங்களில் பாசிப்பயறு, பச்சரிசி, வெல்லம் போன்றவற்றை சேர்த்து கொழுக்கட்டை செய்து சாப்பிட்டு வரலாம்
● உணவில் பயறு வகைகள் எடுத்துக் கொள்வது சிறந்தது.
. |
Dr. ரா. ருஷ்மி கிருத்திகா,BSMS,
I பதிவு எண் :6930
ஸ்ரீ செந்தூர் சித்த மருத்துவமனை,
4/24 A , வளசரவாக்கம் ,திருநகர் ,சென்னை -87
தொலைபேசி எண் :9751104379 Email:drrushmibsms21@gmail.com
Popular Posts
PANCHAMUTTI KANJI - A Nutritional Porridge for Babies
- Get link
- X
- Other Apps
Comments