Search This Blog
Welcome to Chendursiddha blog. Siddha is a traditional system of medicine mainly followed in southern parts of India. More than a medicine "Siddha a way of life" .
Featured
- Get link
- X
- Other Apps
கடை பூப்பு (மெனோபாஸ்)
கடை பூப்பு (மெனோபாஸ்)
மகளிர்களின்
பருவ மாறுதல்களில் கடை பூப்பு (மெனோபாஸ்) மிகவும்
முக்கியமானது. இதற்கு பலரும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை, பெண்களுக்கு
மாதந்தோறும் நடைபெற்ற பூப்பு நிகழ்ச்சி முழுமையாக
நின்ற நிலையே கடை பூப்பாகும். இது
சாதாரணமாக 40 வயது முதல் 50
வயதுக்குள் பூப்பு முடிந்து விடலாம்.
அரிதாக சிலருக்கு 40 வயதிற்கு முன்னரே
முடிந்து விடலாம். இதில் மாதவிடாயின் போது
வரும் குருதி கசிவின் தன்மையானது உடனடியாக
நின்றுவிடலாம்; படிப்படியாக குறையலாம்; மாதவிடாய் ஒழுங்கற்று நடக்கலாம் அல்லது அதிக குருதி கசிவுடன் இருக்கலாம்.
பூப்பு முடியும் கால கட்டங்களில் மகளிர்களுக்கு ஹார்மோன் மாற்றங்களால் உடல் மற்றும் மனதில் சில மாற்றங்கள் ஏற்படும்.
- ஈஸ்டிரோஜனின் அளவு குறைவதால் எலும்புகளில் உள்ள சுண்ணாம்பு சத்து குறைந்து எலும்பு தேயத் தொடங்கும்.
- மேலும் ஈஸ்டிரோஜன் பெண்களுக்கு இருதய கோளாறு வராமல் தடுக்கும், கடை பூப்புக்கு பின்பு அவர்களுக்கு இருதய பாதிப்புக்கான சதவிகிதம் அதிகமாக இருக்கும்.
- முகத்தில் ரோம வளர்ச்சி இருக்கலாம்.
- கருப்பை உள்ளுறுப்புகளில் சுருக்கம் ஏற்படும்.
- மார்பகங்கள் சுருங்கத் தொடங்கும்.
- கூபக தசைகள் சுருங்கத் தொடங்கும்.
- இரவில் அதிக வியர்வை உண்டாகும்.
- தூக்கமின்மை, படபடப்பு, மனப் பதற்றம், கோபம், துக்கம், ஞாபக மறதி இவைகள் ஏற்படும்.
- சிறுநீர் கழிப்பதில் சிரமம் மற்றும் கட்டுப்படுத்த முடியாத நிலைமை ஏற்படும்.
- இடுப்பு வலி, மூட்டுகளில் வலி ஆகிய குறிகுணங்கள் ஏற்படலாம் .
எவ்வாறு கடை பூப்பு நிகழ்ந்துவிட்டது என்று உறுதி செய்வது?
- பூப்பு தடை நடந்த கடைசி மாதம் முதல் 12 மாதங்களுக்கு மாதவிடாய் வராமலிருக்க வேண்டும்.கடை பூப்புக்கான வயது வரம்பில் இருக்க வேண்டும் .
- கடை பூப்புக்கான குறிகுணங்கள் ஏற்பட்டு இருக்க வேண்டும்.
- ரத்த பரிசோதனையில் எஸ்தர்டையால் அளவு <20 pg/ ml இருக்க வேண்டும்.
- பூப்பு முடிவு எய்தி சில மாதங்களுக்குப் பிறகு மறுபடியும் குருதி கசிவு தோன்றினால், அம்மகளிரை மிக கவனத்துடன் பரிசோதனை செய்வது அவசியம்.
- பூப்பு முடிவு ஏற்பட்டுவிட்டது என்று நிர்ணயமாகி விட்ட பிறகு, குருதி ஒழுக்கு ஏற்பட்டால், மகளிரின் கருப்பையில் புற்று நோய் உண்டாகியுள்ளது என்று கருத வேண்டும்.
- கருப்பை புற்று நோய் என்று கவனித்து விட்டால் உடனடியாக மருத்துவம் செய்வது அவசியம்.
மருத்துவ ஆலோசனை:
·
தினமும் 1 மணி நேரம் உடற்பயிற்சி
அவசியம்.
· புரத சத்து மற்றும் சுண்ணாம்பு
சத்து அதிகம் நிறைந்த பொருட்களான பன்னீர், முளைக்கட்டிய தானியம், கேழ்வரகு பயறு
வகைகள் ஆகியவைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
·
தினமும் 300
ml பால் அருந்தவும்.
· தினமும் மாலை வெயிலில் 20
நிமிடம் நிற்கவும், விட்டமின் – D
சூரிய ஒளியில் அதிகமாக கிடைக்கும்; அதன் மூலம் எலும்புகள் வலுப்பெரும்.
· Phytoestrogen (ஃபைட்டோ
ஈஸ்ட்ரோஜன்) பொருட்களான எள்ளு, சோயா பீன்ஸ் ஆகியவற்றை உணவில் அதிகமாக
சேர்த்துக் கொள்வதன் மூலமாக ஈஸ்ட்ரோஜன் அளவு சீராக இருக்க உதவும்.
· கீரை வகைகள், பிஞ்சு காய்கறிகள்,
அத்திப்பழம், பாதாம், முருங்கை சூப், சிவந்த நிறமுடைய பழங்கள் கொய்யா, மாதுளை
போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம் .
· தினமும் 1 டம்ளர் மோர் குடிக்க
வேண்டும் இதில் 250 mg சுண்ணாம்பு சத்து கிடைக்கும்.
· மனப்பதற்றம், படபடப்பு, கோபம்
போன்ற குறிகுணங்களுக்கு சூர்ய நமஸ்காரம், பிராணயாமம் மிகவும் சிறந்தது.
இந்த
வகை உணவு பழக்கத்தை வாரத்தில் 2
அல்லது 3 நாட்கள் பயன்படுத்த கடை
பூப்பு பருவத்தை மென்மையாக கடக்க உதவும்.
"சித்த மருத்துவம் ஒரு வாழ்க்கை முறை"
உணவே மருந்து ;மருந்தே உணவு !!
Dr.ரா.ருஷ்மி கிருத்திகா, B.S.M.S
Email:drrushmibsms21@gmail.com
Popular Posts
PANCHAMUTTI KANJI - A Nutritional Porridge for Babies
- Get link
- X
- Other Apps
Comments