Skip to main content

Featured

பஞ்சமுட்டி கஞ்சி

  இப்போது    உள்ள   மக்கள் பண்டைய   உணவு   பழக்கத்தை மறந்துவிட்டு   நவீன   உணவு பழக்கத்திற்கு   மிகுந்த   ஆர்வம் காட்டி வருகிறார்கள் . குழந்தைகளுக்கு கொடுக்கும்   உணவுகளில்   தற்போது   மரபணு   மாற்றப்பட்ட   உணவுகளான   பீடியாசர்  , செர்லாக்   போன்ற   உணவுகளே தற்போது   தாய்மார்கள்    கொடுத்து   வருகி றார்கள் .  இதனால் வரும்   பின்   விளைவுகள்   எண்ணற்றது .  சிலர்   குழந்தைகளுக்கு ஊட்ட   சத்து   குறைவான   உணவுகளை   கொடுப்பதால் ஊட்டச்சத்து   குறைவினால்   பல   நோய்கள்   ஏற்படுகிறது .    நமது   உடலில்   தோன்றும்   எந்தவித   பிரச்சனைகளுக்கும்   நாம் உணவின்   மூலமே   தீர்வு   காணலாம்   என்பது   சித்தர்களின் வ ாக்கு  ” உணவே   மருந்து ,  மருந்தே   உணவு ” .  குழந்தைகளின் நலத்தை   காப்பதற்காக   சித்தரிகள்   கொடுத்த   சிறந்த   உணவு முறை   தான்   " பஞ்ச   முட்டி    கஞ்சி " .  இது   ஒரு   சிறந்த ஊட்டச்சத்து   நிறைந்த   அர்புதமான   உண வாகும் . பஞ்ச   மூட்டி   கஞ்சி  -  பஞ்ச   என்றால்   ஐந்து   என்றும்   முட்டி என்றால்   முடிச்சு   என் றும்   பொருள்படும் .  இதில்  5  வகையான புரதச்சத்து   நிறை

மகளிர் நலம் காக்கும் சித்த மருத்துவ உணவு முறை


"சூரியன் இன்றி பூமி
சுழலாது பெண்கள் 
இன்றி இப்பூவுலகம் 
இயங்காது"
இன்று மார்ச் 8 சர்வதேச மகளிர் தினம். மகளிர் நலம் காப்பதில் சித்த மருத்துவதிற்கு பெரும் பங்கு உள்ளது .தமிழகத்தில் பலகாலமாகப் பெண்கள் பூப்பு எய்திய பின் ஆரோக்கியமான உணவு வகைகளைக் கொடுப்பது வழக்கம். இந்த ஆரோக்கிய உணவு பழக்கத்தை 
குறைந்தபட்சம் ஆறு மாதங்களாவது கொடுப்பது வழக்கம். 
தற்போது இதனை பெண் பூப்பு எய்திய அன்றைக்கு மட்டும் கொடுக்கும் சடங்காகச் சுருங்கிவிட்டது. மகளிர் நலனில் நீண்டகாலமாக சித்த மருத்துவத்தில் பயன்படுத்தி வந்த மாதவிடாய் கால உணவு முறையை  இங்கு காண்போம்.

 மாதவிடாய் கால (1 ஆம் நாள் முதல் 28 ஆம் நாள் வரை) சாப்பிட வேண்டிய உணவு முறை :

  • 1 முதல் 5 நாட்கள் - எள்
  • 6 முதல் 14 நாட்கள் - உளுந்து
  • 15 முதல் 28 நாட்கள் - வெந்தயம்
எள்ளு உருண்டை: (1 முதல் 5 நாட்கள் - எள்)


சேரும் பொருட்கள் :

  • வெள்ளை எள்ளு- 1 கப்
  • வெல்லம் -3\4 கப்
  • ஏலக்காய் பொடி – சிறிதளவு

செய்முறை:

  • வெள்ளை எள்ளை பழுப்பு நிறம்வரும் வரை வறுத்து எள்ளை அரைத்து எடுத்துக் கொண்டு வெல்லம், ஏலக்காய் பொடி சேர்த்து நன்றாக பிசைந்து உருண்டையாக எடுத்துகொள்ளவும்.

மருத்துவ பயன் :

  • பெண்களுக்கு மாதாந்திரப் பூப்பு நன்றாக நடைபெற உதவும்..
  • Phytoestrogen  சத்து எள்ளில் உள்ளதால் கர்ப்பபை நீக்கியவர்களுக்கு ஈஸ்ட்ரோஜன் இழப்பை எள்ளு உருண்டை நிவர்த்தி செய்யும்.

உளுந்தங்களி: (6 முதல் 14 நாட்கள் - உளுந்து)



சேரும் பொருட்கள்:

  • சம்பா பச்சரிசி - 1 பங்கு
  • முழு உளுந்து - 1\4 பங்கு
  • ஏலக்காய் பொடி - சிறிதளவு
  • கரும்பு வெல்லம் - தேவையான அளவு.

செய்முறை :

  • சம்பா பச்சரிசி மற்றும் முழு உளுந்தை இலேசாக வறுத்துப் பொடியாக்கவும்.
  • கரும்பு வெல்லத்தில் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து மேற்கூறிய பொடியை சேர்க்கவும்,அத்துடன் ஏலக்காய் பொடி மற்றும் நல்லெண்ணெய் சேர்த்து களிபதத்தில் கிளறி இறக்கவும்.

மருத்துவ பயன்:

  • பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் இடுப்பு வலி மற்றும் உடல் வலி நீங்கும்.

வெந்தயக் கஞ்சி:(15 முதல் 28 நாட்கள் - வெந்தயம்)

சேரும் பொருட்கள்:
  • வெந்தயம் -1 பங்கு
  • சம்பா அரிசி - 4 பங்கு
  • தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை:

  • சம்பா அரிசி மற்றும் வெந்தயத்தை இளம் சிவப்பாக  வறுத்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கஞ்சியாக காய்ச்சி எடுத்துக்கொள்ளவும்.

மருத்துவ பயன்:

  • பூப்பு சரிவர நிகழ்வதற்கும் , கருப்பையில் கட்டி வராமல் தடுப்பதற்கும் Hormone Imbalance சரி செய்ய பயன்படுகிறது.
  • கர்ப்பப்பையில் சளி சவ்வுகள் சரியான தடிமனுக்குப் பராமரிப்பதன் மூலம் கருப்பை ஆரோக்கியமாக இருக்கும்.
 இந்த மகளிர் சித்த மருத்துவ உணவு முறையை, தினமும் ஒரு நேரமோ ஒரு வேளையோ உட்கொள்வது நல்லது. இதில் எள் -உளுந்து -வெந்தயம் என்ற வரிசையை மாற்றக்கூடாது என்பது மிக முக்கியமானது.
 மாதவிடாய் கால உணவு முறையின் பயன்:

  • மலட்டுத்தன்மை நீங்கும்.
  • சினைப்பை கட்டிகள் உருவாவது தடுக்கப்படும்
  • கருப்பைக் கட்டிகள் வருவதை தடுக்கும்.
  • கருப்பை நீக்கம் தேவைப்படாது என்பதே இந்தச் சித்த மருத்துவ உணவு முறையின் சிறப்பம்சம்.

ஆரோக்கியமான உணவின்மூலம் மாதவிடாய் நோய்கள் அணுகாத ஆரோக்கியமான  சமூகத்தை உருவாக்க சித்த மருத்துவ உணவு முறை உதவும்.


"சித்த மருத்துவம் ஒரு வாழ்க்கை முறை"

 உணவே மருந்து ;மருந்தே உணவு   

-R. Rushmi Kruthiga (B.S.M.S)

Email:drrushmibsms2021@gmail.com

Comments

Popular Posts